கொரோனாவின் கோரம் ; பலி எண்ணிக்கை 304 ஆகியது

கொரோனாவின் கோரம் ; பலி எண்ணிக்கை 304 ஆகியது

கொரோனாவின் கோரம் ; பலி எண்ணிக்கை 304 ஆகியது

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2020 | 7:28 am

Colombo (News 1st) சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, சீனாவில் இதுவரை 14,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா, பிரித்தானியா மற்றும் சுவீடனில் தொற்று ஏற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உலகில் 20 இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தமது நாடுகளுக்குள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, பெரும்பாலான நாடுகள் சீனாவிலிருந்து வருகை தருபவர்களுக்குத் தடை விதித்துள்ளன.

இந்தநிலையில் அண்மைக் காலத்தில் சீனாவிற்கு சென்று வந்த அனைத்து வௌிநாட்டுப் பிர​ஜைகளையும் தமது நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என அமெரிக்கா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

அத்துடன் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்துள்ள சீனப் பிரஜைகளுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகளை வியட்நாம் அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

சீனாவுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறு, அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் நாடுகள் தமது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சீனாவின் வுஹானில் தங்கியுள்ள தமது பிரஜைகளை இன்று நாட்டிற்கு அழைத்து செல்ல பிரித்தானியா நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் சீனாவிலுள்ள இராஜந்திர அதிகாரிகளை தற்காலிகமாக நாட்டிற்கு அழைத்துள்ளதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்