காட்டுத் தீ பரவும் சம்பவங்கள் அதிகரிப்பு

காட்டுத் தீ பரவும் சம்பவங்கள் அதிகரிப்பு

by Staff Writer 02-02-2020 | 12:01 PM
Colombo (News 1st) வனப்பகுதிகளில் காட்டுத் தீ பரவுவது அதிகரித்துள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள வனப்பகுதிகளில் கடந்த மாதத்தில் அதிக தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் W.A.C. வேரகொட குறிப்பிட்டுள்ளார். வறட்சி மற்றும் மனித செயற்பாடுகளால் வனப்பகுதிகளில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் தீ பரவிய சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். இரவு வேளைகளிலேயே தீ மூட்டப்படுவதாகத் தெரிவித்துள்ள வனப் பாதுகாப்புத் திணைக்களம், இதனால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுப்பதில் சிக்கல் தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, நுவரெலியா - நானுஓயா எடின்பேர்க் தோட்டத்திலுள்ள வனப்பகுதியில் தீ பரவியுள்ளது. நேற்று நண்பகல் வேளையில் தீ பரவ ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பொலிஸாரும் நுவரெலிய வனப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.