by Staff Writer 02-02-2020 | 7:36 AM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.
இரகசியமாக இந்த சாட்சி பதிவு இடம்பெற்றதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர மாவனெல்லை பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியும் நேற்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்துள்ளார்.
மாவனெல்ல பகுதியில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கே அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் இதுவரை 460 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 59 பேர் சாட்சியமளித்துள்ளனர்.