எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்: விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்: விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்: விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

02 Feb, 2020 | 1:50 pm

Colombo (News 1st) எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பூரண விசாரணை நடத்தப்படவுள்ளது.

விமானக் கொள்வனவு தொடர்பில் ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் Airbus நிறுவனத்திற்கு இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கலின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேசிய விமான சேவை, விமானத் தயாரிப்பு நிறுவனமான எயார்பஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட போது சிலர், நிதி மோசடி செய்ததாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு சுட்டிகாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் விசாரணை மேற்கொண்டு தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்