English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
01 Feb, 2020 | 8:44 pm
Colombo (News 1st) V-Force குழுவினர் இன்று முற்பகல் கல்கிசை கடற்பகுதியில் உயிர் பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.
தேசிய உயிர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் இடர் முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் அமைப்பு ஆகியனவும் இதில் இணைந்துகொண்டன.
நீர்த்தேக்கங்களில் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது, அனர்த்த பாதுகாப்பு குழாத்தினருக்கு உறுதுணையாக செயற்படும் நோக்கில் V-Force குழாத்தினருக்கு பயிற்றுவிக்கும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தேசிய உயிர் பாதுகாப்பு அமைப்பின் வழிகாட்டலின் கீழ் இந்த பயிற்சி இடம்பெற்றதுடன், அதன் தலைவர் அசங்க நாணயக்கார உள்ளிட்ட உயிர் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
நீர் நிலைகளை அண்மித்துள்ள நியூஸ்ஃபெஸ்ட் பிராந்திய செய்தியாளர்களும் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர்.
இதன்போது, உயிர் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், செயன்முறை
பயிற்சிகளும் இடம்பெற்றன.
அனுபவமிக்க உயிர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து கடலில் கப்பல் கவிழும்போது செயற்படும் முறை தொடர்பில் இதன்போது ஒத்திகை இடம்பெற்றது.
முதல் தரத்திலிருந்து உயிர் பாதுகாப்பு பயிற்சியை பெற்றுக்கொண்ட V-Force உறுப்பினர்களுக்கு இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
11 Mar, 2020 | 07:47 AM
14 Dec, 2019 | 08:20 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS