6 நாடுகளை சேர்ந்தவர்கள் புகலிடம் கோரி அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை

6 நாடுகளை சேர்ந்தவர்கள் புகலிடம் கோரி அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை

6 நாடுகளை சேர்ந்தவர்கள் புகலிடம் கோரி அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2020 | 5:09 pm

Colombo (News 1st) நைஜீரியா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து புகலிடம் கோரி அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கான தடையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

நைஜீரியா, எரித்ரியா, சூடான், தன்சானியா, கிர்கிஸ்தான் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்கு புகலிடம் கோரி விண்ணப்பிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் தகவல் பகிர்வு தரங்களை பூர்த்தி செய்யாமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்கான சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் அமெரிக்கா நைஜீரியாவிற்கு ஏனைய ஐந்து நாடுகளை விட இரண்டு மடங்கு குடியேற்ற விசாக்களை வழங்கியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்