5 ஆவது பாரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது – நிர்மலா சீதாராமன்

5 ஆவது பாரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது – நிர்மலா சீதாராமன்

5 ஆவது பாரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது – நிர்மலா சீதாராமன்

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2020 | 5:18 pm

Colombo (News 1st) உலக நாடுகளிலேயே 5 ஆவது பாரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

இதன்போது, விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் குறித்து அறிவித்தார்.

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்களை அமைப்பதற்காக 20 இலட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், விவசாயத்துறையை மேம்படுத்த 16 அம்சத் திட்டம் உருவாக்கப்படவுள்ளதாகவும் வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்காக “தானிய இலட்சுமி” திட்டமும் செயற்படுத்தப்படவுள்ளது.

கிருஷி உடான் எனும் பதிய திட்டம் மூலம் தேசிய சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.

இதனிடையே, ஔவையாரின் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டியும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை நிகழ்த்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்