பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட தமிழ் தேசியக் கட்சி தீர்மானம்

by Staff Writer 01-02-2020 | 8:28 PM
Colombo (News 1st) பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தமிழ் தேசியக் கட்சியின் ஊடக சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம் N.ஶ்ரீகாந்தா இதனைத் தெரிவித்தார். தனித்து போட்டியிடுவதற்கு ஏதுவாக தங்களுடன் இணைந்து செயற்பட விரும்பும் தமிழ் அரசியல் கட்சிகளை அடையாளம் கண்டு அவர்களுடன் இதயப்பூர்வமாக தீவிரமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக N.ஶ்ரீகாந்தா குறிப்பிட்டார்.