கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான உள்ளக பயணிகள் விமான சேவை ஆரம்பம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான உள்ளக பயணிகள் விமான சேவை ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2020 | 4:13 pm

Colombo (News 1st) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான உள்ளக பயணிகள் விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டது.

ATR 72 ரக விமானம் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் ஒரு தடவையில் 70 பேர் பயணிக்க முடியும்.

திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறவுள்ளது.

கொழும்பு – இரத்மலானையிலிருந்து காலை 7.30-க்கு பயணத்தை ஆரம்பிக்கும் விமானம் காலை 8.30-க்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து காலை 9.30-க்கு இரத்மலானையை நோக்கி விமானம் மீண்டும் பயணிக்கும்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவைக்கு 7500 ரூபா அறவிடப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்