ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகப்பூர்வமாக வௌியேறியது பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகப்பூர்வமாக வௌியேறியது பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உத்தியோகப்பூர்வமாக வௌியேறியது பிரித்தானியா

எழுத்தாளர் Bella Dalima

01 Feb, 2020 | 4:58 pm

Colombo (News 1st) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகப்பூர்வமாக வௌியேறியுள்ளது.

GMT நேரப்படி 23:00 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறியுள்ளது.

இதனை முன்னிட்டு நேரக்கணிப்பீட்டு கடிகாரம் நிறுத்தப்பட்டு, தூதரகங்களுக்கு வௌியே அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

47 வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக செயற்பட்ட பிரித்தானியா, ஒன்றியத்திலிருந்து விலகிமையினூடாக நாட்டை ஐக்கியமாக்கி முன்னோக்கி செல்வதற்கான புதிய பாதை கிடைத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிட் நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வௌியேறுகின்றமை தமக்கு வருத்தமளிப்பதாக ஜேர்மன் சான்சலர் அஞ்சலா மேர்க்கல் மற்றும் பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக செயற்படுவதை விட அதிலிருந்து விலகுகின்றமை பிரித்தானியாவிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், பிரெக்ஸிட் தினத்தை பிரித்தானிய மக்கள் கொண்டாடியுள்ளனர்.

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு வௌியே கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்