by Staff Writer 31-01-2020 | 8:49 PM
Colombo (News 1st) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி எனப்படும் EPRLF கட்சியின் பெயரை மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
EPRLF என்பதற்கு பதிலாக தமிழர் ஐக்கிய முன்னணி என பெயரை மாற்றுவது தொடர்பிலான கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், கட்சியின் பெயர் மாற்றம் தொடர்பில் ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியிடம் தேர்தல்கள் ஆணைக்குழு வினவியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் இரட்ணஜீவன் கூல் தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர் ஐக்கிய முன்னணியாக ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னரே தமிழர் விடுதலைக் கூட்டணியாக பதிவு செய்யப்பட்டது.
இதன் காரணமாகவே EPRLF கட்சிக்கு தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரை வழங்குவது தொடர்பில் வீ.ஆனந்தசங்கரியின் நிலைப்பாட்டினை தேர்தல்கள் ஆணைக்குழு வினவியுள்ளது.
இதேவேளை, EPRLF-இன் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயர் மாற்றத்திற்கு தான் ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கூறினார்.
தனது நிலைப்பாட்டினை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.