by Staff Writer 31-01-2020 | 9:15 PM
Colombo (News 1st) வருடத்தின் நடுப்பகுதியில் பாசிப்பயறு உற்பத்தி மேற்கொள்ளவுள்ள விவசாயிகளுக்கு விதைப் பயறுகள் வழங்கப்படவுள்ளன.
ஐந்து ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களைக் கொண்டவர்களுக்கு இந்த விதைப்பயறுகள் வழங்கப்படவுள்ளன.
விதை மற்றும் நடுகை தொடர்பான ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளன.
இதன்மூலம் பயறு உற்பத்தி செய்யும் விவசாயிகள் நன்மையடைய முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.