by Staff Writer 31-01-2020 | 5:24 PM
Colombo (News 1st) யாழ். மாவட்டத்தில் உருளைக் கிழங்கு பயிர் செய்கையில் படைப்புழுவின் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அச்சுவேலி - செல்வநாயகபுரத்தில் 127 ஏக்கரில் உருளைக் கிழங்கு பயிர் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட உருளைக் கிழங்கு பயிர் செய்கையில் முதன்முறையாக படைப்புழுவின் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சுமார் 10 ஏக்கர் பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ள உருளைக் கிழங்கினையே படைப்புழு தாக்கியுள்ளது.
உருளைக் கிழங்கின் தண்டுப் பகுதியையே படைப்புழு தாக்கியுள்ளது.
உருளைக் கிழங்கினை அறுவடை செய்யவிருந்த நிலையில், படைப்புழு தாக்கியுள்ளமையினால் தாம் பலத்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்றிருந்தனர்.
வேப்பம் பிரித்தெடுப்பு கரைசலை தௌிப்பதன் மூலமும் இரசாயன கிருமி நாசினிகளைப் பயன்படுத்தியும் இதனைக் கட்டுப்படுத்தலாம் என விவசாய திணைக்கள அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.