பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பை மாற்றத் தீர்மானம்

பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பை மாற்றத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2020 | 9:09 pm

Colombo (News 1st)  பொதுஜன ஐக்கிய முன்னணி நேற்று (30) இரவு கூடி தமது கட்சியின் யாப்பை மாற்றத் தீர்மானித்துள்ளது.

பொதுஜன பெரமுனவுடன் உருவாக்கப்படவுள்ள கூட்டமைப்பை இலக்காகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியினர் கூறினர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கூடிய பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய யாப்பை நிறைவேற்றி, இணைத்தலைவர்கள் இருவரை நியமிப்பதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழுவில் பொதுஜன பெரமுனவிற்கு 51 வீதமும், பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு 31 வீத பிரதிநிதித்துவத்தையும் வழங்க வேண்டும் என புதிய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்