by Bella Dalima 31-01-2020 | 4:56 PM
Colombo (News 1st) சூரியனின் கொந்தளிப்பான மேற்பரப்பு இதுவரை இல்லாத வகையில், அமெரிக்காவில் உள்ள புதிய நவீன தொலைநோக்கியின் மூலம் துல்லியமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.
பேரண்டத்தில் காணப்படும் பல்வேறு அண்டங்களில் ஒன்றுதான் பால்வெளி மண்டலம். சூரியன் உட்பட நம் கண்களுக்குத் தெரியும் அனைத்துமே பால்வெளி மண்டலத்தைச் சார்ந்தவை. சூரியனைப்பற்றியும், சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்கள் பற்றிய ஆராய்ச்சிகளிலும் உலகின் பல நாடுகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், வானியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடான அமெரிக்காவின் தேசிய விஞ்ஞான அமைப்பு சூரியனின் மேற்பரப்பை இதுவரை யாரும் படம்பிடித்திராத வகையில், துல்லியமாக நவீன நுண்ணோக்கி மூலம் படம்பிடித்துள்ளது.
Daniel K. Inouye சூரிய தொலை நோக்கி படம்பிடித்துள்ள சூரியனின் புகைப்படம் தான் தற்போதைக்கு மிக மேம்படுத்தப்பட்ட படமாக உள்ளது.