எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பில் உள்ள 15 பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பில் உள்ள 15 பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பில் உள்ள 15 பாடசாலைகளுக்கு விடுமுறை

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2020 | 5:05 pm

Colombo (News 1st) 72 ஆவது சுதந்திர தின ஒத்திகைகளுக்காக எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பில் உள்ள 15 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகளின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் நோக்கில், கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு ராஜகிரிய வித்தியாலயம், தேர்ஸ்டன் கல்லூரி, யஷோதரா வித்தியாலயம், மியூசியஸ் கல்லூரி உள்ளிட்ட 15 பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நடவடிக்கைளில் கலந்துகொள்ளவுள்ள பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்குடன், கொழும்பு மஹாநாம கல்லூரி, பொல்வத்த புனித மைக்கல் ஆண்கள் பாடசாலை மற்றும் பொல்வத்த புனித மேரி மகளிர் பாடசாலையின் கனிஷ்ட பிரிவு என்பனவற்றுக்கும் எதிர்வரும் 3 ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதனைத் தவிர மிஹிந்து மகா வித்தியாலயம், அல் ஹிதாயா வித்தியாலயம் மற்றும் அஷோக வித்தியாலயம் என்பனவற்றுக்கும் சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை வழங்கப்பட்டுள்ள நாளுக்கான கல்வி நடவடிக்கைகளை பிறிதொரு நாளில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்