ஹொரணையில் 192 கிலோகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது 

ஹொரணையில் 192 கிலோகிராம் ஹெரோயினுடன் மூவர் கைது 

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2020 | 9:52 am

Colombo (News 1st) ஹொரணையில் 192 கிலோகிராம் ஹெரோயினுடன் 2 பெண்கள் உள்ளிட்ட 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, பேலியகொட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது அதிவேக வீதியில் சந்தேகத்திற்கிடமான வாகனமொன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது, 15 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, பண்டாரகம பகுதியில் வீட்டுத் தோட்டமொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 177 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 10 கைத்துப்பாக்கிகளும் 19 மெகசின் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்