வட்டி வீதங்களை குறைக்க மத்திய வங்கி தீர்மானம்

வட்டி வீதங்களை குறைக்க மத்திய வங்கி தீர்மானம்

வட்டி வீதங்களை குறைக்க மத்திய வங்கி தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2020 | 12:42 pm

Colombo (News 1st) வட்டி வீதங்களைக் குறைப்பதற்கு மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நிலையான வைப்புக்கு 6.5 வீத வட்டியை வழங்கவும் நிலையான வைப்பினூடான கடனுக்கு 7.5 வீத வட்டியை வழங்கவும் மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

நாட்டினதும் பூகோள பொருளாதார மற்றும் நிதிச்சந்தையில் காணப்படும் நிலை மற்றும் விருத்தியை ஆராய்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்தின் ஊடாக வங்கி கடனுக்கான வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்