மெக்ஸிக்கோ - கனேடிய ஒப்பந்தம்: ட்ரம்ப் கைச்சாத்து

மெக்ஸிக்கோ - கனேடிய ஒப்பந்தத்தில் ட்ரம்ப் கைச்சாத்து

by Staff Writer 30-01-2020 | 1:35 PM
Colombo (News 1st) கனடா மற்றும் மெக்ஸிக்கோவுடனான புதிய வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். அமெரிக்க வர்த்தகத் துறையின் பிரகாசமான எதிர்காலத்துக்கு இந்த ஒப்பந்தம் வாய்ப்பளிக்கும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். 1994 வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு மாற்றீடாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் எவரையும் ட்ரம்ப் அழைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.