முறிகள் மோசடி தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் பின் இணைப்புகள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2020 | 4:27 pm

Colombo (News 1st) சபாநாயகர் கரு ஜயசூரியவின் கோரிக்கைக்கு அமைய மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் பின் இணைப்புகள் மற்றும் வௌிப்படுத்தல்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

முறிகள் மோசடி தொடர்பான 5 தடயவியல் கணக்காய்வு அறிக்கைகள் அண்மையில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.

இவற்றுடன் தொடர்புபட்ட பின் இணைப்புகள் மற்றும் வெளிப்படுத்தல்களை சமர்ப்பிக்குமாறு சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அவை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கைகள் தொடர்பான விவாதம் எதிர்வரும் பெப்ரவரி 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்