மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

மத்திய செயற்குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2020 | 2:29 pm

Colombo (News 1st) இன்று பிற்பகல் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

தம்மைத் தவிர சரத் பொன்சேகா, அஜித் பீ பெரேரா, ரோசி சேனாநாயக்க ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேராவிடம் நாம் வினவியபோது, தமக்கும் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (30) பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்