கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Jan, 2020 | 7:58 am

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் முழு உலகமும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

சவால் பாரியதாக இருந்தாலும் அதற்கான பதில் நடவடிக்கை அதைக்காட்டிலும்
ஆக்கபூர்வமாக உள்ளதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தின் டாக்டர் மைக் ரியன் (Mike Ryan), சீனாவின் நடவடிக்கைகள் குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலக சுகாதார அவசரகால நிலைக்கு வழிவகுக்குமா என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் இன்று (30) கூடுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் சீனாவில் 130 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன் கிட்டத்தட்ட 6,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் வுஹான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்தநிலையில், வைரஸ் தொற்றிலிருந்து மீள்வதற்கான மருந்துகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்