by Staff Writer 30-01-2020 | 3:12 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் 30 தொடக்கம் 40 வரையான உறுப்பினர்கள் இன்று இடம்பெறும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில், செயற்குழுவின் 4 உறுப்பினர்களை விலக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் காரணமாக கூட்டத்தில் பங்கேற்காதிருக்க முடிவு செய்துள்ளதாக கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாக்கார், சரத் பொன்சேகா, அஜித் பீ. பெரேரா, ரோசி சேனாநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.