ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2020 | 7:28 am

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (30) கூடவுள்ளது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் பிற்பகல் 3 மணிக்கு மத்திய செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய மத்திய செயற்குழுவின் செயற்பாட்டுக்காலம், கடந்த 31ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

எனவே, மத்திய செயற்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் அண்மையில் முன்னெடுக்கப்பட்டன.

கட்சி மறுசீரமைப்பு மற்றும் பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்