இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடர்: நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடர்: நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடர்: நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2020 | 12:50 pm

Colombo (News 1st) இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள குழாத்தில் ரொஸ் டெய்லர், டிம் சவுதி, டொம் லெதம், கொலின் டி கிரேண்ட்ஹோம் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஹென்ரி நிக்கொல்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இருபதுக்கு 20 தொடரில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் கொலின் முன்ரோவுக்கு நியூசிலாந்து ஒருநாள் குழாத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

நட்சத்திர வீரர்களான ட்ரன்ட் போல்ட், மெட் ஹென்ரி, லுக்கி பேர்குசன் ஆகியோர் உபாதை காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளனர்.

பந்துவீச்சு சகலதுறை வீரரான Scott Kuggeleijn, 3 வருடங்களுக்கு பின்னர் நியூசிலாந்து ஒருநாள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரில் மோதவுள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 5ஆம் திகதி ஹெமில்டனில் ஆரம்பமாகவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்