வுஹான் நகரிலிருந்து வௌிநாட்டவர்கள் வௌியேற்றம்

வுஹான் நகரிலிருந்து நூற்றுக்கணக்கான வௌிநாட்டவர்கள் வௌியேற்றம்

by Staff Writer 29-01-2020 | 12:44 PM
Colombo (News 1st) கொரோனா (CoronaVirus) வைரஸின் பிறப்பிடமான சீனாவின் வுஹான் நகரிலிருந்து நூற்றுக்கும் அதிகமான வௌிநாட்டவர்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து நாடு திரும்பும் 600 பிரஜைகளையும் கிறிஸ்மஸ் தீவில் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைப்பதற்கு அவுஸ்திரேலியா உத்தேசித்துள்ளது. இதேவேளை, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தமது பிரஜைகளை நாட்டுக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா வைரஸை சாத்தான் என வர்ணித்துள்ள சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், சீனா அதனைத் தோற்கடிக்கும் என கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5,974 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.