யாழில் SLTB ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

யாழில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

by Staff Writer 29-01-2020 | 2:01 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்று (29) கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பொலிஸாரின் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் தாம் பாதிக்கப்படுவதாக சாரதிகளும் நடத்துனர்களும் தெரிவித்துள்ளனர். யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றதுடன், சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், போக்குவரத்து சேவை பாதிக்காத வகையில் கவனயீர்ப்பை மேற்கொண்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தூரப் பிரதேச பயணங்களில், போதைப்பொருள் சோதனையின்போது, பொலிஸார் பஸ் ஊழியர்களை நீண்டநேரம் தடுத்துவைத்திருப்பதால் பயணிகள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவதாக ஊழியர்கள் இதன்போது குற்றஞ்சுமத்தியுள்ளனர். இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான வட பிராந்திய அதிகாரிகள் எவரும் இந்த விடயம் குறித்த தமது நலனில் அக்கறை கொள்ளவில்லை எனவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.