151 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது சிம்பாப்வே அணி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: சிம்பாப்வே 151 ஓட்டங்களால் முன்னிலை

by Staff Writer 29-01-2020 | 8:57 PM
Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே 151 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது. ஹராரேயில் நடைபெறும் இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே 406 ஓட்டங்களைக் குவித்தது. பதிலளித்தாடிய இலங்கை மூன்றாம் நாளான இன்று 2 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்களுடன் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது. 19 ஓட்டங்களுடன் களமிறங்கிய குசல் மென்டிஸ் மேலும் 3 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். கெவின் கசுசா காயமடைந்த காரணத்தால் அவர் சிகிச்சைக்காக களத்தைவிட்டு வௌியேறினார். தினேஷ் சந்திமால், நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் 10-க்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அஞ்சலோ மெத்யூஸ் 64 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 42 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 293 ஓட்டங்களுடன் முடிவிற்கு வர சிம்பாப்வே 113 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சிக்கந்தர் ரசா 43 ஓவர்களில் 113 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தினார்.