ஹீரோவாகும் மொட்டை ராஜேந்திரன்

ஹீரோவாகும் மொட்டை ராஜேந்திரன்

ஹீரோவாகும் மொட்டை ராஜேந்திரன்

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2020 | 4:58 pm

அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். இப்படத்தில் கொடூர வில்லன் வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். இதையடுத்து, சில படங்களில் வில்லனாக நடித்த அவர், பின்னர் காமெடி வேடங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். அறிமுக இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் இயக்கும் ‘ராபின்ஹுட்’ என்ற படத்தில் மொட்டை ராஜேந்திரன் ஹீரோவாக நடிக்கிறார்.

அசுரன், ராட்சசன் படங்களில் நடித்த அம்மு அபிராமி இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்