முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2020 | 7:27 pm

Colombo (News 1st) முகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை சுகாதார அமைச்சு இன்று நிர்ணயித்துள்ளது.

அதற்கமைய, பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய முகக்கவசமொன்றின் அதிகபட்ச சில்லறை விலை 15 ரூபாவாகும்.

பயன்படுத்திய பின்னர் வீசக்கூடிய சத்திரசிகிச்சை முகக்கவசமொன்றின் விலையும் 15 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

N95 ரக முகக்கவசமொன்றின் விலை 150 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

இந்த விலைகளுக்கு அதிகமாக முகக்கவசங்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் பதுக்கி வைத்துள்ள வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்