மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் ட்ரம்பினால் முன்மொழிவு

மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் ட்ரம்பினால் முன்மொழிவு

மத்திய கிழக்கு சமாதானத் திட்டம் ட்ரம்பினால் முன்மொழிவு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

29 Jan, 2020 | 8:25 am

Colombo (News 1st) இஸ்ரேலின் தனிப்பட்ட தலைநகராக ஜெருசலேமை பேணும் யோசனையுடனான மத்திய கிழக்கு சமாதான திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.

இஸ்ரேலின் இறையாண்மையை பறைசாற்றும் வகையில் மேற்குக் கரை குடியேற்றங்களுக்கு மேலதிகமாக சுதந்திரமான பலஸ்தீனிய மாநிலமொன்றை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார்.

தமது முன்மொழிவு பலஸ்தீனியர்களுக்கு இறுதி வாய்ப்பாக அமையக்கூடும் என வௌ்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்ட முன்மொழிவு சதி ஆலோசனை என தெரிவித்து பலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அதனை நிராகரித்துள்ளார்.

ஜெருசலேம் மற்றும் தமது உரிமைகள் விற்பனைக்கு அல்லவெனவும் பேரம்பேசி இதில் எதனையும் பெறமுடியாது எனவும் இதுபோன்ற சதி ஆலோசனைகள் வெற்றிபெறாது எனவும் ட்ரம்ப் மற்றும் நெதன்யாஹுவிற்கு கூறிக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகில் மிக நீண்டகாலமாக தொடரும் இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு டொனால்ட் ட்ரம்ப்பின் மருமகனான ஜெராட் குஷ்னரின் மேற்பார்வையின் கீழ் திட்டத்தின் கட்டட அமைப்பின் நிழற்பட அச்சு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரைப்பகுதியில் இஸ்ரேலிய இராணுவத்தினர் குவிக்கப்பட்டமைக்கு எதிராக 1000 இற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்