தென் கொரியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வௌிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு

தென் கொரியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வௌிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு

தென் கொரியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வௌிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2020 | 3:38 pm

Colombo (News 1st) தென் கொரியாவில் சட்டவிரோதமாக வசிக்கும் வௌிநாட்டவர்களுக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

விசா காலாவதியாகிய பின்னர் சட்டவிரோதமாக தென் கொரியாவில் வாழும் வௌிநாட்டுப் பிரஜைகள் அபராதம் செலுத்தாது அங்கிருந்து வௌியேறுவதற்கு இதனூடாக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தென் கொரியாவில் வாழும் தமது உறவினர்களுக்கு அறிவித்து அவர்களை நாட்டிற்கு வரவழைத்துக் கொள்ளுமாறு இலங்கையிலுள்ளவர்களுக்கு வௌிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை 1345 என்ற இலக்கத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்