சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை

வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை

by Staff Writer 28-01-2020 | 10:16 AM
Colombo (News 1st) வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினருக்கு ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது தொடர்பில் குறித்த சுற்றுநிருபம் வௌியிடப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், விமான நிலையத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மருத்துவக் குழு, சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலை நிர்வாகக் குழுவினர் முகக்கவசம் அணிவதுடன், கையுறைகள் மற்றும் மருத்துவர்கள் பயன்படுத்தும் தலையை மூடும் வகையிலான கவசத்தை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டொக்டர் அனில் ஜாசிங்ஹ தெரிவித்துள்ளார். இதனைத்தவிர, வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கான ஆலோசனைகள் அடங்கிய 4 பக்கங்களைக் கொண்ட விசேட ஆலோசனை சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளது. இதேவேளை, வௌிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகைதருபவர்கள் தமது தகவல்கள் வௌிப்படுத்தும் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்புதல் அவசியமாகும். இதனுடாக, சுற்றுலாப் பயணிகள் நாட்டில தங்கியிருக்கும் காலம், அவர்கள் பயணிக்கவுள்ள பகுதிகள் மற்றும் தங்கும் ஹோட்டல்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதற்காக பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.