137 இலங்கை மாணவர்களை வரவழைக்க நடவடிக்கை

சீனாவிலிருந்து மேலும் 137 இலங்கை மாணவர்களை நாட்டிற்கு வரவழைக்க நடவடிக்கை

by Staff Writer 28-01-2020 | 3:50 PM
Colombo (News 1st) சீனாவில் உள்ள மேலும் 137 இலங்கை மாணவர்களை இன்றிரவு நாட்டிற்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவிற்கான இலங்கையின் பதில் தூதுவர் கே.யோகநாதன் தெரிவித்தார். இதுவரை 204 மாணவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, சீனாவின் வுஹானிலிருந்து நாட்டிற்கு வருகை தரும் அனைத்து இலங்கை மாணவர்களையும் தியத்தலாவையில் இரண்டு வாரங்களுக்கு தங்க வைத்து கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர, கொரோனா வைரஸ் தொடர்பில் தகவல் அறிந்துகொள்வதற்கு, அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 071 0107107 , 011 3071073 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.