கொரோனா தொற்றுக்குள்ளான சீனப் பெண்ணின் உடல் நிலை கவலைக்கிடமாக இல்லை: சுகாதார அமைச்சு

by Staff Writer 28-01-2020 | 7:46 PM
Colombo (News 1st) கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட சீனப் பிரஜையான பெண் விசேட சிகிச்சை மற்றும் பாதுகாப்பு நடைமுறையின் கீழ் அங்கொடை தொற்று நோயியல் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 43 வயதான சீனப் பிரஜையான பெண் கடும் காய்ச்சல் காரணமாக அங்கொடை தொற்று நோயியல் பிரிவில் கடந்த 25 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். இரத்தப் பரிசோதனையின் மூலம் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.