by Staff Writer 28-01-2020 | 7:30 AM
Colombo (News 1st) பயணிகள் தவிர்ந்த ஏனையோர் விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டுக்கு செல்லும் அல்லது வௌிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் தவிர்ந்த அவர்களின் உறவினர்களுக்கு விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்கு இன்று (28) காலை 6 மணி முதல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக
கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சீனாவிலிருந்து நாட்டிற்கு வருகைதருவதற்கு முன்னர், ஒன்லைன் ஊடாக விசாவுக்கு விண்ணப்பித்தல் அவசியம் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் சீனாவிலிருந்து வருகைதருபவர்களை இலகுவாக பரிசோதிக்க முடியும் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க கூறியுள்ளார்.