டிக்கோயாவிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தீ

டிக்கோயாவிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தீ

டிக்கோயாவிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் தீ

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2020 | 11:35 am

Colombo (News 1st) ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு சொந்தமான சுற்றுலா விடுதியொன்றில் இன்று (28) அதிகாலை தீ பரவியுள்ளது.

கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த ஹட்டன் – மல்லியப்பு சந்தியில் அமைந்துள்ள குறித்த சுற்றுலா விடுதியிலேயே இன்று அதிகாலை தீ பரவியுள்ளது.

ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த விடுதிக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

விபத்தில் சுற்றுலா விடுதியின் பெரும்பாலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்