கொரோனா வைரஸின் தாக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆகியது

கொரோனா வைரஸின் தாக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆகியது

கொரோனா வைரஸின் தாக்கம்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆகியது

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

28 Jan, 2020 | 8:06 am

Colombo (News 1st) கொரோனா (coronavirus) வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரே நாளில் 2,835 இலிருந்து 4,515 வரை உயர்வடைந்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுஹான் நகரில் முதற்தடவையாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸானது, தற்போது ஏனைய நாடுகளிலும் பரவியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சீனாவின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிகளிலுள்ள மக்கள் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகும் பட்சத்தில், அதற்கான அறிகுறிகள் சுமார் 14 நாட்களுக்கு பின்னரே தென்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்