ஜோன் போல்ட்டனை விசாரிக்குமாறு வலியுறுத்தல்

ஜோன் போல்ட்டனை விசாரிக்குமாறு ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல்

by Staff Writer 27-01-2020 | 3:36 PM
Colombo (News 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பிற்கான முன்னாள் ஆலோசகர் ஜோன் போல்ட்டன் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். ட்ரம்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பதவிநீக்க விசாரணைகளில், அவரை முன்னிலையாக்கி விசாரணை செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜோ பைடனை விசாரணைக்குட்படுத்தாத வரை, உக்ரைனுக்கான உதவிகளை நிறுத்திவைக்கும் தேவை ட்ரம்புக்கு இருந்ததாக ஜோன் போல்டன் குற்றஞ்சுமத்தியிருந்தார். வௌியிடப்படாத நூல் ஒன்றில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டானது ட்ரம்ப் தரப்பை மேலும் பின்னடைவுக்கு உட்படுத்தக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இருப்பினும், ஜோன் போல்டனை விசாரணைக்குட்படுத்த வேண்டிய தேவை தமக்கு ஏற்பட்டிருக்கவில்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வாரம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.