இலங்கையில் பெண் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளமை உறுதி

இலங்கையில் பெண் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளமை உறுதி

இலங்கையில் பெண் ஒருவரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளமை உறுதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

27 Jan, 2020 | 9:14 pm

Colombo (News 1st) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அங்கொடை தேசிய தொற்றுநோய்ப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயதான சீன நாட்டுப் பெண் ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.

இந்தப் பெண் சீனாவின் ஹூபைய் (Hubei) மாகாணத்திலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி அங்கொடை தொற்றுநோய்ப் பிரிவில் இந்தப் பெண் அனுமதிக்கப்பட்டதாக தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்