வௌிநாட்டு முதலீடு தொடர்பில் முதற்கட்ட இணக்கப்பாடு

வௌிநாட்டு முதலீடு தொடர்பில் முதற்கட்ட இணக்கப்பாடு

by Staff Writer 26-01-2020 | 2:46 PM
Colombo (News 1st) சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டு முதலீடு தொடர்பில் முதற்கட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. விரைவில் இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
பல நிறுவனங்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. ஷெங் எனப்படும் நிறுவனத்தினால் குடியிருப்பு மற்றும் வர்த்தக நிலையங்களைக் கொண்ட தொகுதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதற்கட்டமாவும் இரண்டாவது கட்டமாக 400 மில்லியன் அமெரிக்க டொலராகவும் மொத்தமாக 900 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிகொண்ட திட்டத்தை நிர்மாணிப்பதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கட்டடத் தொகுதிக்கான இடத்திற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலரை முதற்கட்டமாக வழங்கியுள்ளது. அத்துடன் மற்றுமொரு திட்டத்திற்கான சிங்கப்பூர் நிறுவனமொன்றினால் 250 முதலீடு செய்யப்படவுள்ளது. இதனைத்தவிர, முதலீடுகளாக கிடைக்கும் சிறு தொகைகள் அனைத்தையும் ஒன்றுசேர்த்தால், சுமார் ஒரு பில்லியன் முதலீட்டுப் பணம் நாட்டிற்கு கிடைக்கின்றது
என இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதன்போது தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்