நால்வருக்கும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்பது உறுதி

நால்வருக்கும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்பது உறுதி

நால்வருக்கும் கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்பது உறுதி

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2020 | 11:07 am

Colombo (News 1st) பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நால்வரின் இரத்த மாதிரி பரிசோதனைகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கொடை தொற்றுநோய்ப் பிரிவினால் குறித்த இரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர், டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அது குறித்து தொடர்ந்தும் பரிசோதனைக்கு முன்னெடுக்கப்படுவதாக டொக்டர் ஜயருவன் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸினால் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதையும் பொரளை மருத்துவ பரிசோதனை நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்பட்ட நால்வர், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்