சுதந்திர தின ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டம்

சுதந்திர தின ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டம்

சுதந்திர தின ஒத்திகை காரணமாக விசேட போக்குவரத்துத் திட்டம்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2020 | 7:39 am

Colombo (News 1st) 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று, எதிர்வரும் 31 மற்றும் எதிர்வரும் 2, 3 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தினங்களில் காலை 6 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்