சட்டத்தரணிகளின் தொழிற்றுறை பிரச்சினைகளை தீர்க்க குழு நியமனம்

சட்டத்தரணிகளின் தொழிற்றுறை பிரச்சினைகளை தீர்க்க குழு நியமனம்

சட்டத்தரணிகளின் தொழிற்றுறை பிரச்சினைகளை தீர்க்க குழு நியமனம்

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2020 | 12:55 pm

Colombo (News 1st) சட்டத்தரணிகளின் தொழிற்றுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அறுவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் உறுப்பினர்களாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, கே. கனகீஸ்வரன், பைசர் முஸ்தபா, இக்ராம் மொஹமட், ரியென்சி அரசகுலரத்ன மற்றும் டிரந்த வரலியத்த ஆகியோர் காணப்படுகின்றனர்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் கௌஷல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் சட்டத்தரணிகளின் தொழிற்றுறை மற்றும் நீதிமன்ற நடவடிக்கை தொடர்பில் அதிகம் பேசப்பட்டதுடன், அது தொடர்பில் ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதனை முன்னிட்டு நியமிக்கப்பட்டுள்ள குழு நாளை (27) கூடவுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்