பாராளுமன்ற தெரிவுக்குழு தலைவராக சுமந்திரன்

பொதுமக்கள் நிதிக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக சுமந்திரனை நியமிக்க தீர்மானம்

by Staff Writer 25-01-2020 | 3:56 PM
Colombo (News 1st) பொதுமக்கள் நிதிக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான தெரிவுக்குழுவின் தலைவர், சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக்குழு, பொது முயற்சியாண்மைக்கான தெரிவுக்குழு, அரசாங்க நிதிக்கான தெரிவுக்குழு ஆகியவற்றிற்கு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.