கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

by Staff Writer 25-01-2020 | 4:02 PM
Colombo (News 1st) சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 31, 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த தினங்களில் காலை 6 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.