குடியுரிமை திருத்தத்திற்கு ராஜஸ்தானும் எதிர்ப்பு

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தான் சட்டமன்றத்தில் தீர்மானம்

by Bella Dalima 25-01-2020 | 6:03 PM
Colombo (News 1st) சர்ச்சைக்குரிய இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை மதத்தின் அடிப்படையில் வேறுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக குறித்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மதத்தின் அடிப்படையில் வேறுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்பின் 14 ஆவது சரத்தை தௌிவாக மீறுவதாகவும் இந்த தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகின்றது. குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது பாரதிய ஜனதாக் கட்சியினர் கூச்சலிட்டு குழப்பம் விளைவித்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. கேரளா, பஞ்சாப் ஆகியவற்றிற்கு பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய மூன்றாவது மாநிலமாக ராஜஸ்தான் பதிவாகியுள்ளது.