தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கை வர முயன்ற இரு இளைஞர்களிடம் Q பிரிவு பொலிஸார் விசாரணை

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கை வர முயன்ற இரு இளைஞர்களிடம் Q பிரிவு பொலிஸார் விசாரணை

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கை வர முயன்ற இரு இளைஞர்களிடம் Q பிரிவு பொலிஸார் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2020 | 4:21 pm

Colombo (News 1st) தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற இரு இளைஞர்களிடம் கடந்த இரு நாட்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் இராமேஸ்வரத்திலுள்ள தனியார் விடுதியில் இலங்கையை சேர்ந்த ஐவர் தங்கியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் Q பிரிவு பொலிஸார் அங்கு சென்றதாக அங்குள்ள நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, அந்த ஐவரும் இராமநாதபுரம் Q பிரிவு அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் வவுனியா – இலுப்பைக்குளம், மன்னார் – அடம்பன் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மேலும் மூவர் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருவள்ளூர் – கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் தங்கிருந்த இவர்கள் சட்டவிரோதமாக இலங்கைக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்தனர்.

கும்மிடிப்பூண்டி முகாமில் அகதியாக இருந்த மூவரும் விசாரணைகளின் பின்னர் மீண்டும் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்