சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் 16 ஆம் இடத்திற்கு முன்னேறிய அஞ்சலோ மெத்யூஸ்

சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் 16 ஆம் இடத்திற்கு முன்னேறிய அஞ்சலோ மெத்யூஸ்

சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் 16 ஆம் இடத்திற்கு முன்னேறிய அஞ்சலோ மெத்யூஸ்

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2020 | 3:31 pm

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான அஞ்சலோ மெத்யூஸ் சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் 16 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் பேரவை டெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலை அறிவித்துள்ளது.

இதில் இலங்கையின் அஞ்சலோ மெத்யூஸ் 16 ஆம் இடத்தைப் பெற்றுள்ளார்.

சிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் பெற்றதன் மூலம் அவர் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

புதிய நிரல்படுத்தலில் குசல் மென்டிஸ் 26 ஆம் இடத்தையும் தனஞ்சய டி சில்வா 37 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

பந்து வீச்சாளர்களுக்கான நிரல்படுத்தலில் சுரங்க லக்மால் 22 ஆம் இடத்திலும் லஹிரு குமார 30 ஆம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்