இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டும் டைட்டானிக் நாயகன்

இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டும் டைட்டானிக் நாயகன்

இந்தியில் நடிக்க ஆர்வம் காட்டும் டைட்டானிக் நாயகன்

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2020 | 5:32 pm

டைட்டானிக் படம் மூலம் உலகளவில் புகழ்பெற்ற லியானார்டோ டிகாப்ரியோ இந்தி படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஹொலிவுட் வில்லன் நடிகர்கள் தமிழ், இந்தி படங்களில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், தற்போது பிரபல ஹொலிவுட் கதாநாயகன் லியானார்டோ டிகாப்ரியோவும் இந்திக்கு வருகிறார்.

இவர் Titanic, Inception, Once Upon a Time in Hollywood,The Wolf of Wall Street உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

‘டைட்டானிக்’ படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி 10 ஆஸ்கார் விருதுகளை வென்றது. தொடர்ந்து டிகாப்ரியோவின் பல படங்கள் ஆஸ்கார் போட்டிக்கு பரிந்துரைக்கப்பட்டன. The Revenant படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

அடுத்த மாதம் வழங்கப்படவுள்ள ஆஸ்கார் விருதிற்கு இவரது நடிப்பில் வெளியான Once Upon a Time in Hollywood படம் 10 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டிகாப்ரியோவிற்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

டிகாப்ரியோ நடித்தThe Great Gatsby படம் அமிதாப்பச்சன் நடிக்க இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில், டிகாப்ரியோ அளித்துள்ள பேட்டியொன்றில் தனக்கு இந்தி படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது என்று கூறியுள்ளார்.

இந்தி படமொன்றில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் விரைவில் இந்தியில் நடிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்